சென்னை:

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் மனைவியும் விளையாட்டுத் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “மக்களையும் மாணவர்களையும் பாதுகாக்க வேண்டிய அரசைப் பார்த்து, அவர்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவரது இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் கவனத்தைப் பெற்றும் வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version