அடையாறு முதல் ஈசிஆர் வரை பரவும் H5N1 வைரஸ்: மனிதர்களுக்குப் பரவுமா? முழு விபரம் இதோ!

கடந்த சில நாட்களாக சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதிகளில் ஆயிரக்கணக்கான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு H5N1 வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

H5N1 வைரஸ்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த வைரஸ் பொதுவாகப் பறவைகளைத் தாக்கக்கூடியது. ஆனால், பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அவற்றின் எச்சங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கும் அரிதாக இது பரவக்கூடும். இது நுரையீரலைப் பாதிப்பதோடு, தீவிர நிலையில் மூளை மற்றும் இதர உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும் அபாயம் கொண்டது.

கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்:

உங்களுக்கு அல்லது உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்:

  • 100°F-க்கு மேல் காய்ச்சல்
  • தொடர் இருமல் மற்றும் தொண்டை புண்
  • மூச்சுத் திணறல் (நிமோனியா அறிகுறி)
  • உடல் சோர்வு, தசை வலி மற்றும் குமட்டல்
  • கண்களில் தொற்று (Red eyes)

பாதுகாப்பு வழிமுறைகள் (Do’s & Don’ts):

  • தொடக்கூடாது: வீதியிலோ அல்லது மொட்டை மாடியிலோ இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளால் தொடாதீர்கள்.
  • தகவல் அளிக்கவும்: பறவைகள் அசாதாரணமாக இறந்து கிடந்தால் உடனே உள்ளூர் கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் கொடுங்கள்.
  • சுத்தம் முக்கியம்: கோழி, வாத்து போன்ற பறவைகளுக்குத் தீவனம் வைத்த பின் கைகளைச் சோப்பு போட்டு 20 விநாடிகள் நன்கு கழுவுங்கள்.
  • கையுறைகள் கட்டாயம்: தவிர்க்க முடியாத சூழலில் இறந்த பறவைகளை அகற்ற நேரிட்டால், முகக்கவசம் (Mask) மற்றும் கையுறைகளை (Gloves) அணியுங்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version