மலச்சிக்கல் முதல் சிறுநீர் எரிச்சல் வரை.. ஆல்-இன்-ஒன் மருந்து
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள் நம்மைக் பாடாய்ப்படுத்தும். இதற்கு விலையுயர்ந்த குளிர்பானங்களைத் தேடி ஓடுவதை விட, நம் பாரம்பரிய ‘பாதாம் பிசின்’ சிறந்த பலனைத் தரும்.
பாதாம் பிசின்: ஏன் இது கோடைக்குச் சிறந்தது?
பாதாம் மரங்களின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இந்த இயற்கை பிசின், குளிர்ச்சித் தன்மை கொண்டது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் பயன்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய நன்மைகள்:
- உடல் சூடு தணியும்: இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டதால், கோடையில் ஏற்படும் அதிகப்படியான உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
- மலச்சிக்கல் தீர்வு: இதில் நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கலை நீக்கும்.
- செரிமானப் பாதுகாப்பு: மோருடன் கலந்து குடிக்கும்போது, இது சிறந்த ‘புரோபயோடிக்’ ஆகச் செயல்பட்டு செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கும்.
- சிறுநீர் எரிச்சல்: வெயிலால் ஏற்படும் சிறுநீர் பாதை எரிச்சலைச் சரிசெய்யும் வல்லமை கொண்டது.
சாப்பிடும் முறை (டாக்டர் பரிந்துரை):
- தயாரிப்பு: 5 கிராம் பாதாம் பிசினை இரவு முழுவதும் ஒரு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அது ‘ஜெல்’ போல மாறியிருக்கும்.
- முறை 1: ஊறவைத்த ஜெல்லுடன் ஒரு டம்ளர் நீர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
- முறை 2: மாலை நேரத்தில் ஒரு டம்ளர் மோரில் இந்த ஜல்லைக் கலந்து குடிக்கலாம். இது கூடுதல் குளிர்ச்சியைத் தரும்.
- பிற வழிகள்: எலுமிச்சை ஜூஸ், நன்னாரி சர்பத் அல்லது ஜிகர்தண்டாவிலும் சேர்த்துப் பருகலாம்.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கும் இது மிகவும் நல்லது.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் மட்டும் தேன் அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பது அவசியம்.


