Author: Pearl

📲 QR Code இருந்தால்தான் Entry… திருச்சியில் முதல்வர் விஜய்யின் முதல் நன்றி கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி! திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, QR Code இணைக்கப்பட்ட நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தமிழ்நாடு நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் விஜய் இன்று மாலை 4 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான…

Read More

மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில், தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா சிறப்பு சாமி தரிசனம் செய்தனர். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு, தம்பதியினர் கருப்பண்ணசாமியை நேரில் வழிபட்டு நன்றி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில், கருப்பு நிற சேலையில் எளிமையான தோற்றத்தில் வந்த ஜோதிகா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சூர்யாவுடன் இணைந்து சன்னதியில் கைகளை கூப்பி பக்தியுடன் வழிபட்ட அவர், படத்தின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர். இவர்களுடன் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். சூர்யா – ஜோதிகா தம்பதியினர் கோவிலுக்கு வந்த தகவல் பரவியதும், ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் உற்சாகமான பரபரப்பு நிலவியது. ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற இந்த பக்தி தரிசனம், ரசிகர்கள்…

Read More