Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- லஞ்சம் கொடுத்த அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
- தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றி பெற ‘விற்பனை’ வித்தையைக் கற்க வேண்டும்: ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை!
- ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகை: பல மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை!
- டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலையில் திடீரென உருவான ராட்சத பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!
- இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ‘CJP’ அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே புகழாரம்!
- தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
- பரந்தூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!
- சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
Author: globaleye24x7.com
AI Impact மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, இந்தியாவில் டெக்னாலஜி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த ஐநா நிபுணர் குழு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நிபுணர்கள் கூறுகையில், இந்த விவகாரம் ஒரு உலகளாவிய குற்றவியல் அமைப்பு போல செயல்பட்டதற்கான சுட்டுகாட்டுகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக பாலியல் அடிமைத்தனம், மனிதக் கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் போன்ற குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செல்வாக்கு அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று வலியுறுத்தியுள்ள ஐநா குழு, இதில் தொடர்புடைய அனைவர்மீதும் பாரபட்சமற்ற, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தோல்வியை பின்னணியாகக் கொண்டு இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதியில் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருந்தால், இந்தியா அப்போது கோப்பையை கைப்பற்றியிருக்கும். ஆஸ்திரேலியா வெல்ல முடியாது” என்று கைஃப் குறிப்பிட்டுள்ளார் 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் ஐசிசி தொடர் செயல்பாடுகள் சரிவை சந்தித்துள்ளதாக கைஃப் சுட்டிக்காட்டினார். 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் எதிர்பார்த்த நிலையை அவர்கள் எட்டவில்லை. ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணி என்று சொல்லப்பட்ட ஆஸ்திரேலியா தற்போது தடுமாறி வருகிறது” என கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்: இந்திய டி20 உலகக் கோப்பை அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவரின் ஃபார்மை பற்றி அணி நிர்வாகம் கவலைப்படவில்லை என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்சு கோடக் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபிஷேக் ரன் கணக்கைத் தொடங்க முடியாமல் வெளியேறினார். அதேசமயம், நமீபியா போட்டியில் உடல்நலக்குறைவால் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நெதர்லாந்து போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கோடக், “அபிஷேக் தெளிவான மனநிலையில் இருக்கிறார். டி20 வடிவத்தில் அதிரடியாக ஆடும் வீரர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும். சில நேரங்களில் ஆரம்ப ஓவர்களிலேயே அவுட் ஆகுவது இயல்பானது” என்றார். மேலும், “அவரின் திட்டங்கள் தெளிவாக உள்ளன. டி20 கிரிக்கெட்டில் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுப்பதும் முக்கியம். சில தோல்விகள் காரணமாக அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம்…
மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அட்டவணை குறித்து மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும், குறிப்பாக மார்ச் 10 முதல் 15க்குள் தேதிகள் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தகவலின்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் பங்கு கோருவது தவறல்ல என்றும், அதிகாரத்தில் உரிய இடத்தை கேட்பதில் எந்த குறையும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு கேட்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக அர்த்தமில்லை. ஜனநாயக அரசியலில் பங்கீடு குறித்து பேசுவது இயல்பானது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய எல்லைகளை காக்கும் இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் சுப்பிரமணி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, பட்டிவீரன்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், கரூர், கொடைக்கானல் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். வத்தலகுண்டு நகரின் அடையாளமான காளியம்மன் கோவில் முன்பாக தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்வகுமார் கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார். கார்டன் லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் கென்னடி முன்னிலை வகித்து வீரர்களை ஊக்குவித்தார். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான், காளியம்மன் கோவிலில் இருந்து பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி வளாகம் வரை நடைபெற்றது.…
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி நகரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (TVK) உடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், தற்போது இருமுனைப் போட்டியாகக் கருதப்படும் தேர்தல் மூன்று முனைப் போட்டியாக மாறக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. திமுக – காங்கிரஸ் உறவில் உட்பிளவு? 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 133 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனால் மாநில அளவில் காங்கிரஸ் வளர்ச்சி தடைபட்டதாக கட்சியின் சில தலைவர்கள் கருதுகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றிருந்த வாக்கு விகிதத்தை விட 2021ல் காங்கிரஸின் ஆதரவு குறைந்தது என்பதும் அவர்களின் கவலையாகும் TVK எழுச்சி – காங்கிரசுக்கு புதிய வாய்ப்பு? விஜயின் TVK கட்சி புதிதாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள்…
தங்கம் விலையில் இன்று குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது. சவரனுக்கு ரூ.720 வரை குறைந்துள்ளதாக நகை விற்பனையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தங்கம் விலை சமீப நாட்களில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலையில் இன்றைய இந்த சரிவு, நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு சிறிய நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களே விலை குறைவுக்கு காரணம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கம் விலை அடுத்த நாட்களில் எந்த திசையில் நகரும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவனமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் தமிழ்நாடு மட்டும் அல்லாது, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மொத்தம் 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கு நடத்தப்படுகிறது. காலியாகும் இடங்கள் மாநிலங்களவையில் ஆறு ஆண்டு கால பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து இந்த இடங்கள் காலியாகின்றன. தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முக்கிய தேதிகள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்? மாநிலங்களவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறையில், ஒற்றை மாற்று வாக்கு (Single Transferable Vote) முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மை…
