செய்திச் சுருக்கம் & முக்கிய குறிப்புகள்
- VAT வரி குறைப்பு அறிவிப்பு: நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், விமான எரிபொருள் (Aviation Turbine Fuel – ATF) மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
- வரி விகித விவரங்கள்:
- சென்னை விமான நிலையத்தில்: 29 சதவீதமாக இருந்த வாட் வரி 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மற்ற தமிழக விமான நிலையங்களில்: வாட் வரி வெறும் 1 சதவீதமாகக் அதிரடியாகக் குறைக்கப்பட்டுளளது.
- இண்டிகோ & ஏர் இந்தியா விரிவாக்கம்: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிக் குறைப்பைத் தொடர்ந்து, முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ (IndoGo) மற்றும் ஏர் இந்தியா (Air India) ஆகியவை தமிழ்நாட்டில் தங்கள் விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.
- வான்வெளி இணைப்பு மேம்பாடு: தமிழ்நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் இடையேயான வான்வழி இணைப்பை (Connectivity) மேம்படுத்தும் வகையில் விமான நிறுவனங்களுடன் மாநில அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவியாக அமையும்.
#InvestInTN #OneTrillionTN #TVKVijay #ATFVATCut #IndiGo #AirIndia #ChennaiAirport #TamilNaduGovernment #AviationNews


