நெல் குவிண்டாலுக்கு ரூ.72 அதிகரிப்பு; புதிய விலை ரூ.2,441 ஆக நிர்ணயம்!

பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2026-27 நிதியாண்டிற்கான காரிஃப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price) உயர்த்துவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள் – ஒரு பார்வை:

  • நெல் விலை உயர்வு: நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டு ரூ.2,369 ஆக இருந்த ஒரு குவிண்டால் நெல்லின் விலை, தற்போது ரூ.2,441 ஆக அதிகரித்துள்ளது.
  • 14 வகை பயிர்கள்: நெல் மட்டுமின்றி கம்பு, சோளம், ராகி, துவரை, உளுந்து, பாசிப்பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட 14 வகையான பயிர்களுக்கும் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • உற்பத்தி செலவு + 50%: விவசாயிகளின் உற்பத்தி செலவை விட குறைந்தது 50 சதவீதமாவது கூடுதல் லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Share.
Leave A Reply

Exit mobile version