“இந்தியாவின் வலிமைக்கு முன்னால் பாகிஸ்தான் மிகவும் சிறிய நாடு; நமது ராணுவம் எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது” என்று பாஜ மாநில முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான கே. அண்ணாமலை கோவையில் பேசினார்.
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் கூறியதாவது:
- ஒப்பீடு: “இந்தியாவுக்கு அருகில் பாகிஸ்தான் இருப்பது என்பது, 500 ரூபாய் நோட்டின் அருகே 25 பைசா நாணயத்தை வைப்பதற்கு ஒப்பானது. பொருளாதாரம், ராணுவ பலம் எனப் பலவற்றிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கோ ஒப்பீட்டிற்கோ பாகிஸ்தான் ஈடாக முடியாது.
- ராணுவத்தின் பதிலடி: எல்லையில் நமது இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை எதிரி நாட்டுக்கு ரூ.14,500 கோடி அளவிற்குப் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான சேதத்தை நமது படைகள் விளைவித்துள்ளன.
- பயங்கரவாதத்திற்குப் பதில்: எல்லைப் பாதுகாப்பில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது. எதிரிகள் நம்மை நோக்கி ஒரு அடி கை நீட்டினால், நாம் நான்கு அடி திருப்பிக் கொடுக்கும் அளவிற்குத் துணிச்சலான தலைமையின்கீழ் நாடு உள்ளது.”
என்று அண்ணாமலை பேசினார்.


