ஸ்டான்போர்ட் ஆய்வில் ஆச்சரியத் தகவல் – இணையம் இனி அதிக நேர்மறையாகவும் சுருக்கமாகவும் மாறும்!

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன் மற்றும் இன்டர்நெட் ஆர்க்கிவ் (Internet Archive) ஆகியவை இணைந்து நடத்திய “The Impact of AI-generated Text on the Internet” என்ற ஆய்வில், இணையதளங்களின் உள்ளடக்கம் குறித்து அதிரடியான உண்மைகள் வெளியாகியுள்ளன.

ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  1. வேகமான வளர்ச்சி: 2022-ல் ChatGPT அறிமுகமான பிறகு, இணையத்தில் AI-ன் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2025-ன் பாதியிலேயே, புதிதாகத் தொடங்கப்பட்ட இணையதளங்களில் 35% AI-ஆல் உருவாக்கப்பட்டவை அல்லது அதன் உதவியுடன் எழுதப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
  2. அதிக நேர்மறைத்தன்மை: AI-ஆல் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் தகவல்கள், மனிதர்கள் எழுதுவதை விட அதிக நேர்மறையாகவும் (Positive), தேவையற்ற வார்த்தைகள் இன்றி சுருக்கமாகவும் (Concise) இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
  3. ‘Dead Internet’ தியரி: இணையம் என்பது வெறும் ‘பாட்கள்’ (Bots) தங்களுக்குள் உரையாடும் இடமாக மாறிவிடுமோ என்ற அச்சத்திற்கு (Dead Internet Theory) வலுசேர்க்கும் விதமாக, வெறும் மூன்றே ஆண்டுகளில் இணையத்தின் ஒரு பெரும் பகுதியை AI ஆக்கிரமித்துள்ளது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
  4. சவால்கள்: அதே சமயம், ஒரே மாதிரியான எழுத்து நடை (Monoculture) மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மை (Factual Accuracy) ஆகியவை வரும் காலங்களில் சவாலாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version