ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையை போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்துவது கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத வன்முறை செயல் என தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்க முடியாதவை என்றும், மனித உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் இருப்பதாகவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சர்வதேச சமூகமும் கவலை தெரிவித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

