சென்னை: சன் தொலைக்காட்சியில் (Sun TV) பிரைம் டைமில் ஒளிபரப்பாகி, டிஆர்பி (TRP) ரேட்டிங்கில் தற்போது டாப் 5 சீரியல்களில் முதலிடத்தில் மாஸ் காட்டி வரும் சூப்பர்ஹிட் தொடர் ‘மூன்று முடிச்சு’. விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், சின்னத்திரையின் பிரபல நடிகை சஹானா (Sahana Shetty) முக்கியக் கதாபாத்திரத்தில் புதியதாக இணைந்துள்ளார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில், ஸ்வாதி கொண்டே (Swathi Konde) நாயகி நந்தினியாகவும், நியாஸ் கான் (Niyaz Khan) நாயகன் சூர்யாவாகவும் நடித்து வருகின்றனர்.
கதையை மாற்றப்போகும் ‘மாதங்கி’ கேரக்டர்
கிராமத்து பின்னணியில் தந்தையின் பாசத்தில் வளர்ந்த நந்தினி, எதிர்பாராத சூழலில் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவைத் திருமணம் செய்து கொள்கிறாள். சூர்யாவின் குடும்பத்தில் அவள் சந்திக்கும் சவால்களும், சூர்யா தன் தாயின் மீதுள்ள கோபத்தால் நந்தினியைப் பயன்படுத்த நினைக்கும் ட்விஸ்டுகளுமே இத்தொடரின் தற்போதைய மையக்கதை.
இந்நிலையில், சூர்யாவின் நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ (CEO) ஆக ‘மாதங்கி’ என்ற பவர்ஃபுல்லான நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்தில் நடிகை சஹானா என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது வருகை சூர்யா – நந்தினி வாழ்க்கையில் அடுத்தகட்டப் புயலைக் கிளப்பும் என்பதால் கதைக்களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
யார் இந்த சஹானா?
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக (VJ) தனது பயணத்தைத் தொடங்கிய சஹானா, விஜய் டிவியின் மெகா ஹிட் தொடரான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக மக்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘அழகு’, ‘உயிரே’, சன் டிவியின் ‘கண்ணான கண்ணே’ மற்றும் ‘தாலாட்டு’ உள்ளிட்ட பல முன்னணி சீரியல்களில் முக்கிய மற்றும் வில்லியான வேடங்களில் நடித்துத் தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவியின் மெகா தொடரில் சஹானா களம் இறங்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


