சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவருக்குத் தனது உருக்கமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி கணேசனைத் தனது திரையுலக வழிகாட்டியாகவும் மூத்த அண்ணனாகவும் கருதிப் போற்றும் கமல்ஹாசனின் இந்த நெகிழ்ச்சியான பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.


