சென்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் இன்று (30.09.2026) முக்கிய முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள் & பிரதிநிதிகள்:

  • அரசு அதிகாரிகள்: உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., தொழிற்கல்வி இயக்குநர் திரு. பொ. ரத்தினசாமி, இ.ஆ.ப., மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஆர். சிங்காரவேல்.
  • கூட்டு நடவடிக்கை குழு பிரதிநிதிகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சுப்பிரமணியன், தலைவர் முனைவர் ஆர். முத்து வேலாயுதம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

முக்கிய விவாதங்கள்: பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள், ஊதியப் பிரச்சனைகள் மற்றும் நிர்வாக சீரமைப்பு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, உரிய தீர்வுகள் காண்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version