புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு புதிய வாக்காளர்கள் அதிகளவில் பதிவு செய்யும் வகையில் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது தேர்தல் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாக்குரிமையை பயன்படுத்த விரும்பும் தகுதியான அனைத்து குடிமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

