ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்குக் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கியதாக வெளியான தகவலை ஈரான் அரசு மறுத்துள்ளது. சமீபத்தில் இந்திய எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் அந்த தகவல்கள் உண்மையல்ல என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்திய கப்பல்களுக்கு தனிப்பட்ட அனுமதி வழங்கியதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், இதுபற்றி தவறான செய்திகள் பரவி வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கடல் போக்குவரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்திய சரக்குக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியதாக வெளியான தகவலை ஈரான் மறுத்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

