மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம் உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கடல்வழிப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான Maersk முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
வளைகுடா நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக Maersk நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எண்ணெய் விநியோகத்தில் தாக்கம்
Maersk நிறுவனத்தின் இந்த முடிவு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதனால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

