மதுரை மாணவி சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. +2 பொதுத்தேர்வு எழுத உறவினருடன் பைக்கில் சென்ற 17 வயது மாணவி துர்கா தேவி விபத்தில் உயிரிழந்தார்.
பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. காயம் தீவிரமாக இருந்ததால் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாணவி சாலை விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

