சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
“உங்கள் மீது யாராவது கை வைத்தால் அடுத்த 15 நிமிடங்களில் 2,000 தவெக தொண்டர்கள் வந்து நிற்பார்கள். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
கட்சித் தொண்டர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய அவர், ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

