கரூர் சம்பவத்தை தொடர்புபடுத்தி தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய், “கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் எனில், ஏன் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள்?” என்றும் அவர் வினவினார். அரசியல் வேறுபாடு இருந்தாலும் ஜனநாயக உரிமைகளை மறுப்பது சரியல்ல எனவும் தெரிவித்தார்.
இந்த கருத்துகளைப் பகிர்ந்தபோது விஜய் உணர்ச்சி வசப்பட்டார். கரூர் விவகாரத்தை நினைவுகூர்ந்த அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கண்களில் நீர் திரண்டது. சில நொடிகள் அமைதியாக நின்ற பிறகு, மீண்டும் உரையை தொடர்ந்தார். அவரது கண்கலங்கிய அந்த தருணம் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
விஜயின் இந்த உரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

