சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு ரூ.2,160 வரை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நகை வாங்க நினைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வணிகர்கள் கூறுகின்றனர்.

