ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த ஐநா நிபுணர் குழு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபுணர்கள் கூறுகையில், இந்த விவகாரம் ஒரு உலகளாவிய குற்றவியல் அமைப்பு போல செயல்பட்டதற்கான சுட்டுகாட்டுகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக பாலியல் அடிமைத்தனம், மனிதக் கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் போன்ற குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செல்வாக்கு அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று வலியுறுத்தியுள்ள ஐநா குழு, இதில் தொடர்புடைய அனைவர்மீதும் பாரபட்சமற்ற, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

