செய்திச் சுருக்கம் & முக்கிய குறிப்புகள்
- நிகழ்வு மற்றும் தலைமை:
- மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் 03/11/2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.
- பயணிகள் பாதுகாப்பு & சேவைகள்:
- பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தி, பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும் இறக்கிவிடவும் வேண்டும்.
- பயணிகளை ஏற்று மறுப்பது அல்லது பாதியில் இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
- பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
- பயணிகளிடம் கனிவான அணுகுமுறை:
- அனைத்துப் பயணிகளிடமும் மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
- குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநநர் மற்றும் நோயாளிகளிடம் கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
- புகார்கள் மீது நடவடிக்கை & கண்காணிப்பு:
- ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் பேருந்து இயக்கம் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளைக் கள அளவில் கண்காணிக்க வேண்டும்
- விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் பணியாற்றுவோர் அந்தந்த பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும்.
#TamilNaduGovernment #CMVijay #TransportDepartment #VijayThamizhanParthiban #PublicTransport #SafeTravels #WelfareGovernance #TNNews #DIPRTN

