சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வேகப்படுத்தும் நோக்கில், MDR திட்டத்தின் கீழ் பிரத்யேக நிதி (MDR Dedicated Fund) உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களை இணையவழிக் கட்டண முறைக்கு மாற்றுதல், UPI பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல் மற்றும் Tier 3 முதல் Tier 6 வரையிலான நகரங்களில் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதே இந்நிதியின் முக்கிய நோக்கமாகும்.
📌 பிரத்யேக ‘MDR நிதி’ வழங்கும் முக்கிய உதவிகள்:
- 🏪 வியாபாரிகள் இணைப்பு (Merchant Onboarding): புதிய சிறு வணிகர்களை டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு வர தேவையான நிதியுதவிகள் வழங்கப்படும்.
- 📈 UPI பரிவர்த்தனை ஊக்குவிப்பு: தற்போதுள்ள சிறு வணிகர்களிடையே UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஊக்கத்தொகை அளிக்கப்படும். சிறிய நகரங்களில் உள்கட்டமைப்பு: Tier 3 முதல் Tier 6 வரை உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் கட்டணக் கட்டமைப்பை வேகப்படுத்தப்படும்.
- 📜 மத்திய அரசுத் திட்டங்களுக்கு ஆதரவு: மத்திய அரசால் அறிவிக்கப்படும் அறிவிக்கப்பட்ட பல்வேறு பணப்பரிவர்த்தனை திட்டங்களுக்கு நிதிசார் உதவிகள் வழங்கப்படும்.
✨ கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பரவலாக்கவும், சிறு வணிகர்களின் தொழில் வளர்ச்சியை உயர்த்தவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்! 📱🏪🌐


