தமிழ்நாடு சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நிகழும் உயிர்ச்சேதங்களைத் தடுக்கவும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஓட்டுநர்களுக்குத் தொடர் பயிற்சிகளை வழங்கவும் உள் (போக்குவரத்து) துறை ஒரு புரட்சிகரக் கல்விமுறையை அறிமுகப்படுத்துகிறது.
உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையின் கீழ், செயற்க நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்களுக்குப் படிப்படியாகப் பயிற்சி அளிக்கும் “திண்ணை” (ThinnAI) சாலைப் பாதுகாப்புச் செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் & தொழில்நுட்பப் பயிற்சி:
- 📱 “திண்ணை” (ThinnAI) செயலி (App): இணையவழியான ஸ்மார்ட்போன் செயலி மூலம் ஓட்டுநர்கள் இருக்கும் இடத்திலிருந்தே படிப்படியாகச் சாலை விதிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் கற்றுக்கொள்ளும் (Step-by-step Learning) நவீனப் பயிற்சி முறை.
- 🧠 செயற்க நுண்ணறிவு & புத்தாக்கப் பயிற்சி: ஓட்டுநர்களின் கவனக்குறைவைத் தவிர்க்கும் பொருட்டு, ஏஐ (AI) தளத்தின் வழிகாட்டலில் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher Courses) வழங்கப்படவுள்ளன.
- 🏫 IIT மெட்ராஸ் கூட்டாண்மை: சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) சாலைப் பாதுகாப்பு சிறப்பு மையம் (Centre of Excellence for Road Safety) இச்செயலியை வடிவமைத்துத் தயாரித்துள்ளது.
- 🚀 முன்னோடித் திட்டம் (Pilot Project): முதற்கட்டமாக இத்திட்டம் குறிப்பிட்ட மண்டலங்களில் முன்னோடிச் சோதனையாகச் செயல்படுத்தப்பட்டு, பின்னர்ப் படிப்படியாக மாநிலத்தின் அனைத்துப் பிரிவு ஓட்டுநர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

