முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் உலகளாவிய உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் வகையில், வெளிநாட்டில் சென்று முதுகலைப் பட்டப்படிப்பு (Master’s Degree) பயில்வதற்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
2026-2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்புபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
📌 தகுதிகள் & முக்கிய நிபந்தனைகள்:
- 🎓 பல்கலைக்கழகத் தகுதி:உலகளாவிய QS (Quacquarelli Symonds) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் (Unconditional Offer Letter) பெற்றிருக்க வேண்டும்.
- 💰 வருமான வரம்பு:பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 📊 கல்வித் தகுதி:இளங்கலைப் பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையான தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
- 📚 அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகள்:மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பிரிவுகள்.
📝 விண்ணப்பிக்கும் முறை:
- www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை,கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம்,சேப்பாக்கம், சென்னை – 600 005.
🗓️ விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/10/2026

