🚢 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (2026-27): நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நவீனத் திட்டங்கள்!
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை 2026-27-இல் அறிவிக்கப்பட்டுள்ள 3 முக்கிய சிறப்பம்சங்கள்:
📌 முக்கிய அறிவிப்புகள்:
🤖 செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு:
நெடுஞ்சாலைத் துறையின் சாலை மற்றும் பால வடிவமைப்புக்கான வாகனப் போக்குவரத்தைக் கணக்கிட, செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் சார்ந்த புதிய தொழில்நுட்ப முறை நடப்பாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
🛥️ பாம்பன் வழியாகப் பயணிகள் படகுப் போக்குவரத்து:
இராமேஸ்வரம் அக்னிதீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.

🌊 இந்தியா – இலங்கை இடையே படகுப் போக்குவரத்து விரிவுபடுத்தல்:
கடல்சார் இணைப்பு, வர்த்தகம், சுற்றுலா, வரலாறு மற்றும் பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை (இலங்கை) இடையே படகுப் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும்.


