சென்னை: வருமான வரிக் கணக்கில் சொத்து மற்றும் வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியம்சங்கள்
- உயர் நீதிமன்ற உத்தரவு: மறைக்கப்பட்ட வருமான வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு நீதிபதி அமர்வு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
- வருமான வரித்துறை நடவடிக்கை: கணக்கில் காட்டப்படாத சொத்துகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
- அதிர்ச்சி திருப்பம்: திமுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது எழுந்துள்ள இந்தச் சட்ட நடவடிக்கையால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள்து.
செய்தி விவரம்
தமிழகத்தின் முன்னணி அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வருமான வரி மறைப்பு வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளில் முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், உரிய வருமானத்தை மறைத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சம்பந்தப்பட்ட துறையினர் தரப்பில் மேல்முறையீடு மற்றும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் உரிய விளக்கமளிக்குமாறு கோரி அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால், இச்சம்பவம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

