லண்டன்:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறைக்கு எனத் தனி அமைச்சகத்தை உருவாக்கி, அதற்குப் பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் என்பவரைப் பிரிட்டன் அரசு நியமித்துள்ளது.
யார் இந்த கனிஷ்கா நாராயண்?
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் பிறந்த கனிஷ்கா நாராயண், தனது 12-வது வயதில் குடும்பத்துடன் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார். புகழ்பெற்ற ஆக்சுபோர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயின்ற இவர், கார்டிஃப் பகுதியிலிருந்து முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மையின எம்பி (MP) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஆவார்.
புதிய அமைச்சகத்தின் பணி:
பிரிட்டனின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மேற்கொண்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில், ஏஐ துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டு, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்தும் (Cabinet-level status) வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பொருளாதாரம், தொழில் துறை, கல்வி மற்றும் அரசுத் துறைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துவதையும், பாதுகாப்பான முறையில் அதை ஊக்குவிப்பதையும் இவர் மேற்பார்வையிடுவார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகளவில் முக்கியத்துவம் பெற்று வரும் ஏஐ துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது சர்வதேச அளவில் வாழும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

