சென்னை: பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், அவருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனது வேட்புமனுவில் தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை அளித்ததாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் சார்பில் ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் அவருக்குச் சென்று சேரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்குப் புதிய நோட்டீஸ் அனுப்பி பதிலைப் பெற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

