சென்னை:
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளைக் கைப்பற்றி தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்துள்ள திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் தமிழ் திரைப்படங்களின் படைப்பாக்கமும் கலைத் திறனும் மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டு மதிப்பைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் சாதனை:
திரைத்துறையின் உயரிய விருதான தேசிய விருதுகளை வென்ற விருதுலாளர்களின் அர்ப்பணிப்பையும், சிறப்பான உழைப்பையும் பாராட்டிய அவர், இத்தகைய அங்கீகாரங்கள் எதிர்காலத்தில் மேலும் பல தரமான படைப்புகளை உருவாக்கத் திரைத்துறையினருக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என்று சுட்டிக்காட்டினார்.
விருது வென்ற அனைத்து தமிழ் திரைக்கலைஞர்களின் கலைப்பயணம் மேலும் பல சாதனைகளுடன் தொடர வேண்டும் என்றும் சரத்குமார் தனது வாழ்த்துச் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.

