மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 2026-ஆம் ஆண்டிற்கான ‘ஆடி முளைக்கொட்டு திருவிழா’ இன்று (ஜூலை 16) கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியுள்ளது.





தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், அன்னை மீனாட்சி தினமும் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி மாசி மற்றும் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
10 நாள் திருவிழா நிகழ்ச்சிகளின் முழு விவரம்
தினசரி காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அம்மன் திருவீதியுலா நடைபெறும். அதன்படி ஒவ்வொரு நாளும் அம்மன் எழுந்தருளும் வாகனங்களின் விவரம்:
தேதி காலை (9 மணி) இரவு (7 மணி)
16.07.2026 கொடியேற்றம் சிம்ம வாகனம்
17.07.2026 தங்கச் சப்பரம் அன்ன வாகனம்
18.07.2026 தங்கச் சப்பரம் தங்க காமதேனு வாகனம்
19.07.2026 – வெள்ளி யானை வாகனம்
20.07.2026 தங்கச் சப்பரம் வெள்ளி ரிஷப வாகனம்
21.07.2026 தங்கச் சப்பரம் கிளி வாகனம்
22.07.2026 தங்கச் சப்பரம் புஷ்பப் பல்லக்கு
23.07.2026 தங்கச் சப்பரம் தங்கக் குதிரை வாகனம்
24.07.2026 சட்டத்தேர் (10.05 AM – 10.29 AM) புஷ்ப விமானம்
25.07.2026 – கனக தண்டியல்
விழாவின் முக்கிய நிகழ்வுகள்
மாலை மாற்றும் வைபவம் (ஜூலை 22): இரவு புஷ்பப் பல்லக்கில் அன்னை வலம் வந்த பின்னர், உற்சவர் சந்நிதியில் அம்மனுக்கும் சுவாமிக்கும் மாலை மாற்றும் சிறப்பு வைபவம் நடைபெறும். மேலும் அன்றைய தினமே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜையும் அனுசரிக்கப்படுகிறது.
சட்டத்தேர் (ஜூலை 24): விழாவின் 9-வது நாளான ஜூலை 24 அன்று, காலை 10.05 மணி முதல் 10.29 மணிக்குள் கன்னி லக்னத்தில் முக்கிய நிகழ்வான சட்டத்தேர் பவனி நடைபெறும்.
சயனத் திருக்கோலம் (ஜூலை 25): திருவிழாவின் நிறைவு நாளான 25-ஆம் தேதி இரவு, அம்மன் அதியற்புத கனக தண்டியலில் (சயனத் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
இந்த 10 நாள் விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. விழாவைக் காண வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

