சென்னை: இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் அக்கா மகனும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட நாயகனுமான பவிஷ் நாராயணன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா (Trailer & Audio Launch) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமகாலத்து காதல் மற்றும் இளைஞர்களின் ரிலேஷன்ஷிப் சிக்கல்களை மையமாகக் கொண்டு, ஒரு பக்கா கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னராக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜூலை ரிலீஸ் – விழா அறிவிப்பு: இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் அடுத்த கட்டப் பணிகளைப் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ‘லவ் ஓ லவ்’ படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கும் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழா கோலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தின் மூலம் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாக துர்கா (Naga Durga) தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு: ஜிநேமா மீடியா (Zinema Media) மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் (Creative Entertainers) நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை பின்னணியைக் கொண்ட ‘Foxn’ (பிரதீப் பி.ஜே – வேய்ன் பேவி) என்ற இசையமைப்பாளர் கூட்டணி இப்படத்திற்கு துள்ளலான இசையமைத்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு (Editing) பணிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

