அரசுப் பள்ளி மாணவிகளின் கியூட் வீடியோ! அமைச்சர் ராஜ்மோகனுக்கு கோரிக்கை!
அரசுப் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு யூடியூப் சேனல் வாயிலாக விடுத்துள்ள கியூட்டான மற்றும் நியாயமான கோரிக்கை வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தற்போதைய சீருடையால் மாணவிகள் : தற்போது அரசுப் பள்ளிகளில் தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பாவாடை, சட்டை சீருடை தங்களுக்குப் பல நேரங்களில் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருப்பதாக அந்த சிறுமிகள் தங்களது யோசனை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் நாள் முழுவதும் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அதுமட்டுமின்றி உடம்பில் தழும்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
“கான்வென்ட் குழந்தைகள் போல மாற ஆசை!”: தனியார் கான்வென்ட் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் போல தமக்கும் அழகிய ‘பினஃபோர்’ (Pinafore) மாடல் சீருடை வழங்க வேண்டும் என்று அவர்கள் கல்வி அமைச்சரிடம் மழலை மாறாமல் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவு: இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் மாணவிகளின் இந்த கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளிலும் காலணி (Shoes), காலுறைகள் (Socks) மற்றும் நவீன நேர்த்தியான சீருடைகளை அறிமுகப்படுத்தினால், ஏழை எளிய பெற்றோர்களின் மனமும் திருப்தியடையும்.
மேலும், இது தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் ஒழித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தும். கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, புதிய நவீன சீருடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க? அரசுப் பள்ளி மாணவிகளின் இந்த ‘phenoform’ சீருடை கோரிக்கை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஷூ, சாஸுடன் கூடிய நவீன யூனிஃபார்ம் கொண்டு வர வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணுங்க, இந்த செய்தியை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

