புதுதில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனை முன்னிறுத்தும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
▪️ 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
▪️ பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.
▪️ கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும்.
▪️ குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக மேம்படுத்த வேண்டும்.
▪️ ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் நிலுவைத் தொகையான ரூ.3,284 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
▪️ செங்கல்பட்டு – தூத்துக்குடி தொழில் சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.
▪️ ஒகேனக்கல் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.2,283.40 கோடி நிதி வழங்க வேண்டும்.
▪️ திருச்சி – கரூர் மற்றும் கரூர் – கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.
▪️ திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
▪️ சென்னை – குமரி அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
▪️ தமிழ்நாட்டில் 97% நிறைவடைந்த பாரத் நெட் 2-ஆம் கட்டத் திட்டத்தின் எஞ்சிய கிராமங்களையும் இணைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

