Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அசாமில் அதிரடி வேட்டை: ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

    June 19, 2026

    15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படித் தடுக்க முடியும்? – டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

    June 19, 2026

    மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • அசாமில் அதிரடி வேட்டை: ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
    • 15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படித் தடுக்க முடியும்? – டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி
    • மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு
    • வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிபிஐ அதிரடி: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி மற்றும் அவர் மனைவி மீது வழக்குப்பதிவு
    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசித்த ஆளுநர்: அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வு
    • தவெக அரசின் முதல் ஆளுநர் உரை: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்
    • தமிழக அரசின் மேகேதாட்டு தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
    • கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைவு: ‘சிவப்புத் துண்டுடன் பயணிப்பேன்’ என அறிவிப்பு
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      உயர்கல்வியில் புதிய மைல்கல்: பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும் – ஆளுநர் உரை

      June 19, 2026

      மறைந்த மூத்த தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்: முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

      June 19, 2026

      நீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறை வகுக்கக் கோரிய மனு தள்ளுபடி – நீதிமன்றம் உத்தரவு

      June 19, 2026

      ‘மலர்ச்சி’ கட்சியில் சலசலப்பு: 2 எம்.எல்.ஏ.க்களுக்கு ‘விசில்’ சின்னம் கொடுத்த உத்தரவாதம்!

      June 19, 2026

      ஆசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்! தமிழ்நாட்டில் காலியாக உள்ள கல்விப் பணியிடங்களை நிரப்ப அரசு அதிரடியாகப் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது! 🏛️🚀

      June 18, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      FIFA உலகக் கோப்பை: தென் கொரியாவின் தவறு, ரால் ரேஞ்சலின் அதிரடி சேவ் – அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்சிகோ!

      By globaleye24x7.comJune 19, 2026
      Recent

      FIFA உலகக் கோப்பை: தென் கொரியாவின் தவறு, ரால் ரேஞ்சலின் அதிரடி சேவ் – அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்சிகோ!

      June 19, 2026

      ஓவல் டெஸ்ட்: க்ளென் பிலிப்ஸ் அபார சதம்! முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து!

      June 18, 2026

      கவர்னர் உரை: மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

      June 18, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » 24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் மனமார்ந்த பாராட்டு மற்றும் தொலைநோக்கு பரிந்துரைகள்.
    அரசியல்

    24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் மனமார்ந்த பாராட்டு மற்றும் தொலைநோக்கு பரிந்துரைகள்.

    globaleye24x7.comBy globaleye24x7.comJune 10, 2026Updated:June 10, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றான பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், மாநிலத்தின் 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், வெறும் குடிநீர் விநியோகத் திட்டம் மட்டுமல்ல; எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மனிதநேய வளர்ச்சித் திட்டமாகும்.

    மாநிலத்தின் 25 மாநகராட்சிகளில் 24×7 குடிநீர் விநியோகம், 146 நகராட்சிகளில் தினசரி குறைந்தபட்ச குடிநீர் விநியோகம், 479 பேரூராட்சிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற மாற்றத் திட்டங்கள், ரூ.30,000 கோடி Urban Challenge Fund, மழைநீர் மேலாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் நகர்ப்புற நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

    ஆனால், இத்திட்டம் முழுமையான வெற்றியை அடைய வேண்டுமெனில், உலகின் முன்னேறிய நாடுகள் மற்றும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளையும் இணைத்துச் செயல்படுத்துவது அவசியமாகும்.

    இன்றைய நிலையில் பல மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல தசாப்தங்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. பல இடங்களில் குழாய் உடைப்பு, கசிவு, அழுத்தக் குறைபாடு மற்றும் மழைக்காலங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன.

    எனவே, மாநிலம் முழுவதும் GIS (Geographic Information System) அடிப்படையிலான டிஜிட்டல் குடிநீர் வரைபடம் உருவாக்கப்பட வேண்டும். எந்தப் பகுதியில் எத்தனை ஆண்டுகள் பழமையான குழாய்கள் உள்ளன, எங்கு அதிக கசிவுகள் ஏற்படுகின்றன, எங்கு அழுத்தக் குறைபாடு உள்ளது என்பதனை முழுமையாக கண்காணிக்கும் அறிவியல் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

    சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் Smart Water Grid System நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பில் குடிநீர் விநியோகக் குழாய்களில் பொருத்தப்படும் சென்சார்கள் மூலம் நீரழுத்தம், நீரோட்டம், தரம், கசிவு மற்றும் அடைப்பு போன்றவை நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு (AI), Internet of Things (IoT), SCADA Monitoring System, Smart Sensors மற்றும் Real-Time Water Monitoring Technology ஆகியவை கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, குடிநீர் குழாய் உடைப்பு அல்லது கசிவு ஏற்பட்டால் அது பொதுமக்கள் புகார் அளித்த பிறகே தெரியவரும் தற்போதைய நிலையை மாற்றி, தானியங்கி எச்சரிக்கை அமைப்பு (Automated Alert System) உருவாக்கப்பட வேண்டும்.

    மேலும், மின்சார இணைப்புகளைப் போல அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் Smart Water Meter பொருத்தப்பட வேண்டும். குடிநீர் பயன்படுத்தாதவர்களும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை முடிவுக்கு வர வேண்டும். பயன்படுத்திய அளவிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டால், தண்ணீர் வீணடிப்பு குறையும்; நீர் வளங்கள் பாதுகாக்கப்படும்; நிர்வாக வருவாயும் அதிகரிக்கும்.

    சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் அதிகளவு நீரைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கடைநிலை பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான தண்ணீர் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனைத் தடுக்க District Metering Areas (DMA) எனப்படும் பகுதி வாரியான நீர் விநியோக மேலாண்மை முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு பகுதியுக்கும் சமமான அழுத்தத்தில் நீர் வழங்கப்படுவதுடன், நீர் இழப்பும் கட்டுப்படுத்தப்படும்.

    அதேபோல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் விநியோக அமைப்புகளில் Water Quality Sensors பொருத்தி குளோரின் அளவு, பாக்டீரியா அளவு, pH மதிப்பு உள்ளிட்ட தரக்குறியீடுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

    இந்தத் தரவுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் வெளியிடப்பட வேண்டும். தங்கள் பகுதியில் வரும் குடிநீர் தரம் குறித்து மக்கள் நேரடியாக அறியும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திட்டங்களை ஒருங்கிணைத்து, நகர்ப்புற குடிநீர் தேவையின் ஒரு பகுதியை மழைநீர் சேமிப்பு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலைகள், பூங்காக்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் குடிநீரின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க முடியும்.

    குடிநீர் மேலாண்மையை ஒரு சேவைத் துறையாக அல்ல, தேசிய வளப் பாதுகாப்புத் திட்டமாகக் கருதி செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். “ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற இலக்கை அடைய தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, அறிவியல் திட்டமிடல், தரமான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நிர்வாகம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

    மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ள இந்த மக்கள் நலத் திட்டம், முழுமையான தொலைநோக்கு பார்வையுடன், உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களுடன், அறிவியல் ரீதியான செயல்திட்டங்களுடன் அமல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த குடிநீர் மேலாண்மை கொண்ட மாநிலமாக மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் திகழும்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை முன்னெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு, திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    அசாமில் அதிரடி வேட்டை: ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

    June 19, 2026

    15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படித் தடுக்க முடியும்? – டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

    June 19, 2026

    மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

    June 19, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026536

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026460

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026305
    Don't Miss
    இந்தியா

    அசாமில் அதிரடி வேட்டை: ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

    By globaleye24x7.comJune 19, 2026

    குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த சுமார் 14.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல்…

    15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படித் தடுக்க முடியும்? – டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

    June 19, 2026

    மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

    June 19, 2026

    வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிபிஐ அதிரடி: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி மற்றும் அவர் மனைவி மீது வழக்குப்பதிவு

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    அசாமில் அதிரடி வேட்டை: ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

    June 19, 2026

    15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படித் தடுக்க முடியும்? – டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

    June 19, 2026

    மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

    June 19, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026536

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026460

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.