Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    இரவு நேர நேர்மறை எண்ணங்கள் (Night Affirmations)

    August 1, 2026

    பயனாளிகளுக்குக் கணினி திருத்தப் பட்டாக்கள் வழங்கல்! – மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப. நேரில் வழங்கினார்!

    August 1, 2026

    ஸ்ரீ B.S. மூத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா! – J.C.D. பிரபாகர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பு!

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • இரவு நேர நேர்மறை எண்ணங்கள் (Night Affirmations)
    • பயனாளிகளுக்குக் கணினி திருத்தப் பட்டாக்கள் வழங்கல்! – மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப. நேரில் வழங்கினார்!
    • ஸ்ரீ B.S. மூத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா! – J.C.D. பிரபாகர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பு!
    • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026”! – J.C.D. பிரபாகர் நேரில் பங்கேற்று வாழ்த்து!
    • பட்டா பிரச்சினைக்கு நேரிடையான தீர்வு! – ஆயிரம் விளக்கில் அமைச்சரை போனில் அழைத்து தீர்வுகண்ட J.C.D. பிரபாகர்!
    • லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியின் நூற்றாண்டு விழா! – J.C.D. பிரபாகர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்து!
    • ஆயிரம் விளக்கு பவானி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு! – J.C.D. பிரபாகர் தரிசனம்!
    • ஆயிரம் விளக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மையங்கள் துவக்கம்! – J.C.D. பிரபாகர் திறந்து வைத்தார்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      சென்னையில் தடம் பதித்தது ‘ரீகல் ஜுவல்லர்ஸ்’! – தியாகராய நகரில் முதல் கிளையைத் திறந்து வைத்தார் J.C.D. பிரபாகர்!

      August 1, 2026

      2026-27ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கை ஆலோசனைக் கூட்டம்! – மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்படி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது!

      August 1, 2026

      திருவண்ணாமலைக்கு ரூ.623.28 கோடியில் 4 வழி அணுகல் கட்டுப்பாட்டு புறவழிச்சாலை! – மத்திய அரசு டெண்டர் வெளியீடு!

      August 1, 2026

      ரூ.2.85 கோடியில் பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனையகம் & செயல்முறை விளக்கக் கூடம் திறப்பு! – அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா தொடங்கி வைத்தார்!

      August 1, 2026

      அமைச்சர் ரில்ஸ்காகத் துப்பாக்கியைக் கொடுத்த காவல் அதிகாரிக்கு காத்திருப்புப் பட்டியல் தண்டனை – விதிகள் சொல்வது என்ன?

      August 1, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு! – மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து & பரிசுத் தொகை அறிவிப்பு!

      By PearlAugust 1, 2026
      Recent

      காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு! – மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து & பரிசுத் தொகை அறிவிப்பு!

      August 1, 2026

      CWG 2026: தமிழக வீரர்கள் பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு பதக்கம் வென்று அசத்தல்!

      August 1, 2026

      CWG 2026: இன்றும் இந்தியாவுக்கு மூன்று தங்கம்.. நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்ட பிரியங்கா!

      August 1, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனப்பள்ளி அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்: சட்டத்தின் ஆட்சியும் மனிதாபிமானமும் இணைந்து செயல்பட வேண்டும் – முதலமைச்சருக்கு டாக்டர் ஆ. ஹென்றி வேண்டுகோள்
    அரசியல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனப்பள்ளி அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்: சட்டத்தின் ஆட்சியும் மனிதாபிமானமும் இணைந்து செயல்பட வேண்டும் – முதலமைச்சருக்கு டாக்டர் ஆ. ஹென்றி வேண்டுகோள்

    globaleye24x7.comBy globaleye24x7.comJune 8, 2026Updated:June 8, 2026No Comments31 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பாகலூர் உள்வட்டம், தும்மனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற அரசு நில ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    அரசு நிலங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும், ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதும் அரசின் கடமையாகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் பொதுமக்களின் சொத்துகளாகும். அவற்றை தனிநபர்கள் ஆக்கிரமிப்பது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும் என்பதையும் மறுக்க முடியாது.

    ஆனால், தும்மனப்பள்ளி பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவத்தை வெறும் “ஆக்கிரமிப்பு” என்ற ஒரு சட்ட வார்த்தைக்குள் மட்டுமே அடைத்து பார்க்க முடியாது. அந்த நிலப்பகுதியில் தங்கியிருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் அங்கு குடியமர்ந்தனர்? அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கும் அரசு பதில் அளிக்க வேண்டிய கடமை உடையது.

    தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி, கண்காணிப்பின்றி கிடந்த அரசு நிலத்தில், சொந்த வீடு இல்லாத ஏழை மற்றும் எளிய மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை செலவழித்து சிறிய தற்காலிக குடியிருப்புகளை அமைத்துள்ளனர். அவர்களுடன் மனைவி, பிள்ளைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமானது குடியிருப்பு உரிமையாகும். உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று அடிப்படை தேவைகளில் ஒன்றான வீட்டை பெறுவதற்காக மக்கள் மேற்கொண்ட முயற்சியை வெறும் சட்ட மீறல் என்ற கோணத்தில் மட்டும் அணுகுவது முழுமையான சமூகநீதி அணுகுமுறையாக இருக்காது.

    குறிப்பாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே இக்குடியிருப்புகள் உருவாக்கப்பட்டதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தால், தேர்தல் காலத்திலும் அரசின் நிலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே இருந்தது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றியிருந்தால் இத்தகைய சூழ்நிலை உருவாகாமல் தடுக்கப்பட்டிருக்கலாம்.

    எனவே, ஆக்கிரமிப்பு நடந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்யாமல், முழுப் பொறுப்பையும் ஏழை மக்களின் மீது மட்டும் சுமத்துவது நியாயமல்ல. அரசின் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    மேலும், ஒரு இடத்தில் குடியிருப்புகள் உருவாகி, குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிய பின்னர், அந்தக் குடியிருப்புகளை இடித்து அகற்றுவது என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல; அது மனித வாழ்வை நேரடியாக பாதிக்கும் செயல் ஆகும். ஒரு குடும்பத்தின் கனவு, சேமிப்பு, பாதுகாப்பு உணர்வு, குழந்தைகளின் எதிர்கால நம்பிக்கை ஆகிய அனைத்தும் அந்தச் சிறிய குடியிருப்போடு இணைந்திருக்கும்.

    அரசு நிலத்தை மீட்க வேண்டிய அவசியம் இருந்தாலும், அதற்கு முன்பாக அங்கு வசித்த மக்களின் தகுதி, சமூக நிலை, பொருளாதார பின்னணி ஆகியவற்றை ஆய்வு செய்து, உண்மையில் வீடற்ற ஏழை மக்கள் இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம், இலவச வீட்டுமனைப்பட்டா அல்லது அரசு வீட்டு வசதி திட்டங்கள் மூலம் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    ஒரு பறவையின் கூட்டைக் கூட கலைக்கும் முன் மனித மனம் தயங்குகிறது. அப்படியிருக்க, ஏழை மக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் மனிதாபிமானம், கருணை, சமூகநீதி மற்றும் மறுவாழ்வு கொள்கைகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

    தற்போதைய தமிழக அரசு சமூகநீதி, மனிதநேயம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தும் அரசு என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது. எனவே, தும்மனப்பள்ளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆய்வு செய்து, தகுதியுடையவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்று நிலம் அல்லது அரசின் வீட்டு வசதி திட்டங்களின் கீழ் நிரந்தர குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோன்று எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில்:

    • அரசு புறம்போக்கு நிலங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
    • ஆக்கிரமிப்புகள் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்.
    • பொறுப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வீடற்ற ஏழை மக்களுக்கான வீட்டுமனைத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.
    • அரசு நில மீட்பு நடவடிக்கைகளுடன் கட்டாய மறுவாழ்வு கொள்கையையும் இணைக்க வேண்டும்.

    சட்டத்தின் ஆட்சி என்பது மக்களின் நலனுக்காகவே இருக்க வேண்டும்; மக்களின் வாழ்க்கையை சிதைப்பதற்காக அல்ல. சட்டம் கடுமையாக இருக்கலாம்; ஆனால் அரசு கருணையுடனும் மனிதாபிமானத்துடனும் இருக்க வேண்டும். அதுவே உண்மையான மக்கள் ஆட்சி.

    எனவே, தும்மனப்பள்ளி சம்பவத்தை மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகளை வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    டாக்டர் ஆ. ஹென்றி
    நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்
    அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை

    Featured
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026”! – J.C.D. பிரபாகர் நேரில் பங்கேற்று வாழ்த்து!

    August 1, 2026

    வாக்களித்து ஆதரவளித்த விருதுநகர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி! – தொகுதி எம்.எல்.ஏ S.P. செல்வம் நெகிழ்ச்சிப் பதிவு!

    August 1, 2026

    காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு! – மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து & பரிசுத் தொகை அறிவிப்பு!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026545

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026479

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026314
    Don't Miss
    உடல்நலம்

    இரவு நேர நேர்மறை எண்ணங்கள் (Night Affirmations)

    By PearlAugust 1, 2026

    🧘‍♂️ மன அமைதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க: 💤 ஆழ்ந்த தூக்கத்தைப் பெற: 🌅 நாளைக்கான நம்பிக்கையை வளர்க்க:…

    பயனாளிகளுக்குக் கணினி திருத்தப் பட்டாக்கள் வழங்கல்! – மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப. நேரில் வழங்கினார்!

    August 1, 2026

    ஸ்ரீ B.S. மூத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா! – J.C.D. பிரபாகர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பு!

    August 1, 2026

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026”! – J.C.D. பிரபாகர் நேரில் பங்கேற்று வாழ்த்து!

    August 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    இரவு நேர நேர்மறை எண்ணங்கள் (Night Affirmations)

    August 1, 2026

    பயனாளிகளுக்குக் கணினி திருத்தப் பட்டாக்கள் வழங்கல்! – மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப. நேரில் வழங்கினார்!

    August 1, 2026

    ஸ்ரீ B.S. மூத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா! – J.C.D. பிரபாகர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பு!

    August 1, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026545

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026479

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.