ஹார்முஸ் நீரிணை திறப்பு முக்கிய நிபந்தனை
அணு ஆயுதத் தடை – உறுதியான நிலைப்பாடு
அமெரிக்கா–ஈரான் இடையிலான ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் Donald Trump கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படைகள் தொடரும்
ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை, அமெரிக்கப் படைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீறினால் தாக்குதல்
“ஒருவேளை ஒப்பந்தம் மீறப்பட்டால், இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு தாக்குதல்கள் தொடங்கும்” என ட்ரம்ப் எச்சரித்தார்.
முக்கிய நிபந்தனைகள்
அணு ஆயுதத் தடை மற்றும் ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது.

