தக்காளி நம் தினசரி உணவில் இடம் பெறும் பொதுவான காய்கறி. ஆனால் அதை சாலட் போல பச்சையாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் பொட்டாசியம் இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் இதய நோய் அபாயம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
சருமம் பிரகாசமாகும்
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், சரும செல்கள் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இதனால் முகத்தில் இயற்கையான ஒளி மற்றும் நிறம் அதிகரிக்கலாம்.
செரிமானம் மேம்படும்
தக்காளியில் உள்ள நார்ச்சத்து, செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வைட்டமின் சி நிறைந்த தக்காளி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்க துணைபுரிகிறது.
புற்றுநோய் அபாயம் குறைவு
லைகோபின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
எடை கட்டுப்பாடு
குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்ட தக்காளி, எடை குறைக்க முயற்சிப்போருக்கு நல்ல தேர்வு. சாலட்டில் சேர்த்து எடுத்துக்கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும்.
கண் ஆரோக்கியம்
வைட்டமின் ஏ மற்றும் லூடின் போன்ற சத்துக்கள் இருப்பதால் பார்வைத் திறனை பாதுகாக்க உதவுகிறது.

