முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்ட பி.எம். மன்னன், அண்மையில் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுகவில் இணைவார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் எடுத்த இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.மதுரை அரசியலில் அழகிரி அணியின் முக்கிய முகமாக இருந்த மன்னன், 2006–2011 காலகட்டத்தில் மதுரை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்தவர். அப்போது அழகிரியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்கான முயற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சந்தித்தபோதும், கட்சியில் சேர்வதற்கான தெளிவான சிக்னல் கிடைக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்துள்ளார்.

மதுரையில் திமுக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க நபராக இருந்த ‘பொட்டு’ சுரேஷ் படுகொலை வழக்கில் மன்னனின் பெயரும் விசாரணை கட்டத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் அரசியல் செயல்பாடுகளில் ஓரளவு பின்தங்கியிருந்தார்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மன்னன் எடுத்துள்ள அரசியல் முடிவு, மதுரை அரசியல் சமநிலையை மாற்றுமா என்பதே தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version