அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கழக அமைப்புச் செயலாளர் மற்றும் மதுரை கிழக்கு மாவட்ட கழக செயலாளர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.வி.ஆர். ராஜன்செல்லப்பா அவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதனையடுத்து, அஇஅதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த A.P.P. பாண்டியன் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


