நாம் தினமும் உண்ணும் உணவுகள் உடலை வலுப்படுத்தவும், சில நேரங்களில் பாதிக்கவும் செய்கின்றன. குறிப்பாக சில உணவுகளை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மூளை
அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை உட்கொள்வது நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை பாதிக்கலாம். தொடர்ந்து அதிக சர்க்கரை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இதயம்
எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக கொலஸ்டிரால் கொண்ட உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட் வகைகள் இதயத்திற்கு சுமையாக அமையும். இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.
கல்லீரல்
அளவுக்கு மீறிய மதுபானம் கல்லீரலை நேரடியாக பாதிக்கும். தொடர்ந்து இதை பின்பற்றினால் கொழுப்பு கல்லீரல், சீரோசிஸ் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
சிறுநீரகம்
அதிக உப்பு சேர்த்த உணவுகள் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் தரும். இது நீண்ட காலத்தில் சிறுநீரக செயல்பாட்டை குறைக்கக்கூடும்.
கணையம்
கார்பனேட்டட் பானங்கள், அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் ஆகியவை கணையத்தின் இன்சுலின் சுரப்பை பாதிக்கக்கூடும். இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.
நுரையீரல்
மதுபானம், புகைபிடித்தல் மற்றும் அதிக கொழுப்பு உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக புகைபிடித்தல் நேரடியாக நுரையீரல் சேதத்திற்கு காரணமாகும்.
சருமம்
சிலருக்கு பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், பருக்கள் அல்லது சரும பிரச்சினைகள் தோன்றக்கூடும்.


