டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடி ஆட்டம் காட்டி, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5.35 என்ற அசத்தலான நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதிரடியாக விளையாடி 85 ரன்கள் விளாசிய ஹெட்மயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா பெரிய சிக்கலில்

மே.இ.தீவுகளின் இந்த மிகப்பெரிய வெற்றி இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா கடுமையான பாதிப்பில் உள்ளதால், அரையிறுதி வாய்ப்பு மிகவும் மங்கலாகியுள்ளது.
தீர்மானிக்கும் போட்டி
இப்போது தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டியே குரூப் 1 இன் தீர்மானிக்கும் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியின் முடிவே அரையிறுதி அணிகளை உறுதிப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இனி கணக்குப் போட்டி மட்டுமே வழி. பிற அணிகளின் முடிவுகளும் இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

