மாணவிகளுக்காக புதிய பேருந்து! விருதுநகரில் கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியர்
விருதுநகர், 08.10.2026: விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில், புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து இச்சேவையைத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து, ஆட்சித்தலைவர் மாணவிகளுடன் அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். புதிய சேவையால் மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்து: கிராமப்புற மாணவிகளின் கல்விக்கு போக்குவரத்து வசதி எவ்வளவு முக்கியம்? கமெண்ட்டில் சொல்லுங்கள்!
