இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில், கிராம கோயில் பூசாரிகளுக்காக 11 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பூசாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நேரடி பயன் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.
வெளியிடப்பட்ட 11 முக்கிய அறிவிப்புகள்
- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று புத்தாடை வழங்கப்படும்.
- பூசாரி உயிரிழந்தால், வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை ₹50,000 இலிருந்து ₹1,00,000 ஆக உயர்த்தப்படும்.
- கிராம கோயில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ₹75,000 இலிருந்து ₹1,00,000 ஆக உயர்த்தப்படும்.
- இயற்கை எய்திய உறுப்பினரின் ஈமச்சடங்கு நிதி ₹5,000 இலிருந்து ₹10,000 ஆக உயர்த்தப்படும்.
- பெரிய திருக்கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு தொழில்துறை பயிற்சி வழங்கப்படும்.
- திருமண நிதி:
- பூசாரி – ₹3,000
- மகன் – ₹3,000
- மகள் – ₹5,000
இத்தொகையில் ₹1,000 கூடுதலாக உயர்த்தப்படும்.
- பூசாரி மகன், மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ₹1,000 உயர்த்தப்படும்.
- இடைநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நிதி உதவி ஆண்டுக்கு ₹2,000 அதிகரிக்கும்.
- தொழில் சார்ந்த இடைநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நிதி உதவி ஆண்டுக்கு ₹2,000 உயர்த்தப்படும்.
- தொழில்பயிற்சி நிலையங்களில் பயிலும் பூசாரி மகன், மகளுக்கு ஆண்டுக்கு ₹1,000 கூடுதலாக வழங்கப்படும்.
- உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்க வழங்கப்படும் ₹500 நிதி ₹1,000 ஆக உயர்த்தப்படும்.
கிராம கோயில் பூசாரிகள் 11 அறிவிப்புகள், பூசாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், அவர்களின் குடும்ப நலனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள், சமூக நலனில் அரசின் கவனத்தை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.


