தமிழ்நாட்டை இந்தியாவின் மின்வாகன மையமாக (EV Hub) நிலைநிறுத்த முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வரும் அதிவேக தொழில்முன்னெடுப்புகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையைச் சேர்ந்த முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான ‘ராப்டி.HV’ (Raptee.HV) புதிய மெகா விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

சந்தையில் தனது பிரத்யேக அதிநவீன ஹார்டுவேர் மற்றும் ஹை-வோல்டேஜ் தொழில்நுட்ப எலக்ட்ரிக் பைக்குகளுக்கான (EV Motorcycles) தேவையை ஈடுகட்ட, ரூ.200 கோடி கூடுதல் நிதியைத் திரட்டும் பணிகளில் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மெகா விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய விபரங்கள்:

  • மாதாந்திர உற்பத்தி உயர்வு: சென்னையில் தற்போதுள்ள உற்பத்தி ஆலையின் உற்பத்தித் திறனை மாதம் 1,500 யூனிட்டுகளில் இருந்து 3,500 யூனிட்டுகளாக படிப்படியாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திரட்டப்படும் புதிய நிதி, உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் சில்லறை வர்த்தக நெட்வொர்க்கை (Retail Network) விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும்.
  • செய்யாறில் 40 ஏக்கர் புதிய தளம்: ராப்டி.HV நிறுவனம் தனது எதிர்கால பிரம்மாண்ட உற்பத்தித் தேவைக்காக, தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொழில் நகரான செய்யாறில் (Cheyyar) 40 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கியுள்ளது.

ராப்டி.HV (Raptee.HV) தனித்துவம் என்ன?

முன்னாள் டெஸ்லா (Tesla) பொறியாளரால் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம், இந்தியாவின் முதல் ‘ஹை-வோல்டேஜ்’ எலக்ட்ரிக் பைக்கான T30 மாடலைச் சமீபத்தில் அறிமுகம் செய்து விநியோகித்து வருகிறது.

கார்களின் சார்ஜிங் வசதி பைக்குகளுக்கும்: இந்தியாவில் பொதுவாக எலக்ட்ரிக் கார்களுக்குப் பயன்படுத்தப்படும் CCS2 சார்ஜிங் போர்ட் (Charging Port) வசதி கொண்ட நாட்டின் ஒரே மின்வாகன இருசக்கர வாகனம் இதுவாகும். இதனால், கார்களுக்கான பொது டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) நிலையங்களிலேயே வெறும் 36 நிமிடங்களில் இந்த பைக்கை 80% வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

விஜய் அரசின் மின்வாகன உந்துதல்:

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ‘ஸ்டார்ட்-அப் முதலீட்டுக் கொள்கை’-ன் கீழ், டிட்கோ (TIDCO) மூலம் ₹2.5 கோடி முதலீட்டு அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ஆட்டோமொபைல் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ராப்டி.HV தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளை இவி உற்பத்தி மண்டலங்களாக விஜய் அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், ‘பிரேக்ஸ் இந்தியா’ போன்ற பெரும் நிறுவனங்களைத் தொடர்ந்து, ராப்டி போன்ற புதிய தலைமுறை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் செய்யாறை நோக்கித் தங்களது மெகா தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version