சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் (த.வா.க) தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து தங்களது கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம், தமிழக அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல் கட்சியாக த.வா.க மாறியுள்ளது.
இந்த அறிவிப்புடன், வேல்முருகன் கடும் அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்தார். “இனிதான் ஆட்டமே இருக்கிறது! கடந்த 5 ஆண்டுகளில் எந்த அமைச்சர்கள், எந்த துறை செயலாளர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது பற்றிய முழு விவரங்களும் என்னிடம் உள்ளது. அனைத்தையும் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு கணிப்புகள் எழுந்துள்ளன.

