📲 QR Code இருந்தால்தான் Entry… திருச்சியில் முதல்வர் விஜய்யின் முதல் நன்றி கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, QR Code இணைக்கப்பட்ட நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தமிழ்நாடு நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய் இன்று மாலை 4 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து பொதுமக்களை சந்திக்கும் வகையில் சாலை வழி வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், இந்த நிகழ்விற்கு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version