தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசால் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, பாஜகவின் ஒற்றை சட்டமன்ற உறுப்பினரான போஜராஜன் பேச வாய்ப்பு பெறாத போதிலும், அவையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் போது தீர்மானத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதன்மூலம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை உறுதிசெய்யும் அரசினுடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தனித்தீர்மானத்திற்கு அவையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களின் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.


