பாதுகாப்பு குறைபாடு காரணமா? கொளத்தூரில் மைக் கோளாறு: தவெக முதல் நாள் ரோடு ஷோவில் சலசலப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இன்று சென்னையில் 4 முக்கியத் தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டிருந்தார் தவெக தலைவர் விஜய். பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், கொளத்தூரில் தனது உரையை முடித்த கையோடு, திடீரென வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டுத் தனது பனையூர் இல்லத்திற்குத் திரும்பியுள்ளார். இது அவரது வருகைக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று நடந்தது என்ன? – முக்கிய நிகழ்வுகள்:

  1. பெரம்பூர் அதிரடி: பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜய், பெரம்பூரில் திமுக அரசு மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்தார். (இது குறித்த முந்தைய செய்தியை நாம் பார்த்தோம்).
  2. கொளத்தூரில் சதி?: முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் விஜய் பேச முற்பட்டபோது, மைக் சரியாக வேலை செய்யவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெறும் 4 நிமிடங்களில் தனது பேச்சை அவர் முடித்துக் கொள்ள நேரிட்டது.
  3. வில்லிவாக்கம் ரத்து: தவெக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்ட வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்குச் செல்லாமல் விஜய் தனது பயணத்தை ரத்து செய்தார்.
  4. நிர்வாகிகள் விளக்கம்: தவெக நிர்வாகி பூக்கடை குமார் கூறுகையில், “தலைவருக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இன்று வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்றொரு நாளில் அவர் நிச்சயம் இங்கு வருவார்” எனத் தெரிவித்தார்.

அரசியல் நோக்கர்களின் பார்வை:

விஜய்யின் முதல் நாள் பிரச்சாரத்திலேயே மைக் கோளாறு மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் எழுந்தது தவெக ஒருங்கிணைப்பில் உள்ள சுணக்கத்தைக் காட்டுகிறதா அல்லது திட்டமிட்ட இடையூறுகளா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தொகுதியைப் புறக்கணித்தது போன்ற பிம்பம் உருவாகாமல் தடுக்க தவெக தலைமை அடுத்தக்கட்டத் திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version