வேலூரில் இன்று நடைபெறும் தவெக (தமிழக வெற்றி கழகம்) நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முக்கிய ஆலோசனைக் கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள், உறுப்பினர் விரிவாக்கம் மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விஜய் நேரடியாக வழிகாட்டுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நுழைவுக்கு கடும் கட்டுப்பாடு

இந்த நிகழ்ச்சிக்கு QR Code கொண்ட நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு காரணங்களால் அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயின் உரையை எதிர்நோக்கி கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிகழ்வு தவெகின் தேர்தல் பரப்புரைக்கு புதிய திசை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version